சுடச்சுட

  

  சுகேஷ் சந்திரசேகர் யாரென்றே தெரியாது: டிடிவி. தினகரன்

  By புதுதில்லி  |   Published on : 22nd April 2017 02:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  TTV_2

  சுகேஷ் சந்திரசேகர் யாரென்றே தனக்கு தெரியாது என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

  அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இரட்டை இலை சின்னத்தை மீட்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் தர பேரம் பேசியதாகவும் முதற்கட்டமாக 1.3 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தில்லியில் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் டிடிவி. தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  இந்நிலையில் தில்லி போலீசார் கொடுத்த சம்மனை ஏற்று டிடிவி.தினகரன் இன்று காலை விமானம் மூலம் தில்லி புறப்பட்டுச் சென்றார். தில்லி வந்துள்ள அவர் இன்று பிற்பகல் 3 மணியளவில் குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகிறார்.

  இதனிடையே தில்லி விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன், சுகேஷ் சந்திரசேகர் யாரென்றே தனக்கு தெரியாது என்றார். மேலும் குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜராக தில்லி வந்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai