சுடச்சுட

  

  ஜிஎஸ்டியில் பீடிக்கு அதிக வரி: புற்றுநோய் நிபுணர்கள் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 22nd April 2017 11:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் (ஜிஎஸ்டி) "கேடு விளைவிக்கும் பொருள்கள்' என்ற பிரிவில் புகையிலைப் பொருளான பீடியை இடம்பெறச் செய்து, அவற்றுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்று புற்றுநோய் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
  ஜிஎஸ்டி வரி விதிப்பின்கீழ், "கேடு விளைவிக்கும் பொருள்கள்' என்று வகைப்படுத்தப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வகை பொருள்கள் உள்பட அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரி அளவுகளை இறுதி செய்வதற்காக, பிரதமர் மோடி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவிருக்கிறது.
  இந்நிலையில், மும்பையிலுள்ள டாடா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் உள்பட தேசிய புற்றுநோய் கூட்டமைப்பில் (என்சிஜி) இடம்பெற்றுள்ள 108 மருத்துவமனைகளைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள், பிரதமர் மோடிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
  மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் புகையிலைப் பொருளான பீடி, நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தால் நிகழும் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. நாட்டில் புற்றுநோய் காரணமாக நிகழும் உயிரிழப்புகளில் 60 சதவீத இறப்புகளுக்கு பீடியே காரணமாக உள்ளது.
  பீடிக்கு தற்போது மிகக் குறைவான வரியே விதிக்கப்பட்டு வருகிறது.
  இந்த நிலையை மாற்றுவதற்கு, தற்போது ஜிஎஸ்டி வாயிலாக நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. எதிர்கால சந்ததியினரின் நலன்களை கருத்தில் கொண்டு, பீடி உள்ளிட்ட அனைத்து புகையிலைப் பொருள்களையும் "கேடு விளைவிக்கும் பொருள்கள்' பிரிவில் இடம்செய்து, அவற்றுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai