சுடச்சுட

  

  திரிணமூல் காங்கிரஸ் தலைவராக மம்தா பானர்ஜி மீண்டும் தேர்வு

  By DIN  |   Published on : 22nd April 2017 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mamta

  கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேர்தலின்போது அக்கட்சிக்கு நிதியளிக்கிறார் முதல்வரும், கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி.

  திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டரங்கில் மம்தா பானர்ஜி முன்னிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, அக்கட்சியின் துணைத் தலைவர் முகுல் ராய் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மம்தா பானர்ஜி அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்' என்றார்.
  இதையடுத்து, மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
  என்னிடமிருக்கும் பொறுப்பை பிறரிடம் அளித்தால் நன்றாக இருக்குமென்று நான் நினைக்கிறேன். அப்போதுதான், பிற பணிகளில் என்னால் கவனத்தைச் செலுத்த முடியும். தலைவர்களுக்கு அல்லாமல், தொண்டர்களுக்குதான் நான் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பேன். ஏனெனில், கட்சிக்கு தொண்டர்கள்தான் சொத்து. மக்களுக்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சி எப்போதும் பணியாற்றும் என்றார் மம்தா பானர்ஜி.
  காங்கிரஸ் கட்சியில் முன்பு இருந்த மம்தா பானர்ஜி, பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியை கடந்த 1997-ஆம் ஆண்டில் தொடங்கினார். அன்று முதல் அக்கட்சியின் தலைவராக அவர் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai