சுடச்சுட

  

  தோல்விக்கு காரணம் தேடுகிறார் முதல்வர் அரவிந்த் கேஜரிவால்: மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன்

  By புதுதில்லி  |   Published on : 22nd April 2017 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பி, மாநகராட்சித் தேர்தலில் தான்அடையப்போகும் தோல்விக்கு முதல்வர் கேஜரிவால் தற்போதே காரணம் தேடி வருகிறார் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறினார்.

  இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியும் என்ற கேஜரிவாலின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது; அவருக்கு சிந்திக்கும் திறன் இல்லாததையும் பிரதிபலிக்கிறது.

  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்பது, அனைவரும் மோடிக்கு வாக்களிக்கும் ஒன்று என கேஜரிவால் கருதுகிறார். குற்றச்சாட்டுகள் கூறுவது, கடுமையாக விமர்சிப்பது போன்றவையே கேஜரிவாலுக்கு தெரிந்த அரசியலின் ஒரு பகுதியாகும். கடந்த 2013-ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி 28 தொகுதிகளையும், பாஜக 32 தொகுதிகளையும் கைப்பற்றியபோது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேஜரிவால் கேள்வி எழுப்பவில்லை.

  அடுத்த தேர்தலில் எதிர்பாராத வகையில் ஆம் ஆத்மி 67 தொகுதிகளையும், பாஜக 3 தொகுதிகளையும் கைப்பற்றின. சமீபத்தில் பிகார் தேர்தலில் பாஜக மோசமாகத் தோல்வியுற்றது. அப்போதெல்லாம் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழவில்லை.

  ஆனால், தற்போது அதுகுறித்து கேள்வி எழுப்புவதன் மூலம், எதிர்வரும் மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி சந்திக்கப்போகும் தோல்விக்கு கேஜரிவால் தற்போதே காரணம் தேடுகிறார். ஆம் ஆத்மியின் அரசுக்கு எதிராகவே மக்களின் மனநிலை உள்ளது. பாஜகவுக்கு எதிராக அல்ல. அப்படியே பாஜகவுக்கு எதிரான மனநிலை மக்களிடம் இருந்தாலும், புதிய வேட்பாளர்களை களமிறக்கியுள்ள நடவடிக்கை நல்ல பலனைத் தரும் என்று ஹர்ஷ வர்தன் கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai