சுடச்சுட

  

  நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தெலங்கானா அரசு அள்ளி வீசுகிறது

  By DIN  |   Published on : 22nd April 2017 11:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசுவதாக அந்த மாநில பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
  தெலங்கானாவை ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்று முடிந்தது. அந்த மாநாட்டில், விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,000 உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் கே. சந்திரசேகர் அறிவித்தார்.
  இதுகுறித்து அந்த மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
  தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்டன.
  இந்த நிலையிலும், அந்தக் கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள, இரு படுக்கையறைகள் கொண்ட இலவச வீடுகள், தலித்துகளுக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
  இந்தச் சூழலில், மேலும் புதிய வாக்குறுதிகளை முதல்வர் அள்ளி வீசுவது, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும், நம்பகத்தன்மையும் மாநில அரசுக்கு இல்லாததையே காட்டுகிறது.
  மக்களின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரிப்பணத்தைக் கொண்டு மேற்கொள்ளப்படும் திட்டங்களை அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்காமல், தனது கட்சி மாநாட்டில் முதல்வர் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றார் கிருஷ்ண சாகர் ராவ்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai