சுடச்சுட

  

  பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டாலும் முஸ்லிம்களுக்கு உரிய முக்கியத்துவம்: ரவிசங்கர் பிரசாத்

  By DIN  |   Published on : 22nd April 2017 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ravisankarprasath

  புது தில்லி: முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டாலும், அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை மத்திய அரசு கொடுத்து வருகிறது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

  தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், இதுதொடர்பாக பேசியதாவது:

  நாடு முழுவதும் 13 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. மத்தியிலும் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இருந்தபோதிலும், அரசுத் துறைகளில் பணியாற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த எவரையேனும் நாங்கள் நெருக்கடிக்கு ஆளாக்கினோமா?

  முஸ்லிம்களின் வாக்குகள் எங்களுக்கு (பாஜக) கிடைக்காது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அவர்களுக்குரிய முக்கியத்துவத்தை மத்திய அரசு அளிக்காமல் இருக்கிறதா?

  முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல கிராமங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். அங்குள்ள பல இளைஞர்கள், பொதுச் சேவை மையங்களை நடத்தி வருகின்றனர். இதன் மூலம், அரசின் சேவைகள் இணையம் மூலம் கிராம மக்களுக்கு கிடைக்க அவர்கள் உதவிகரமாக உள்ளனர்.

  மேற்கு வங்க மாநிலம், ஜல்பைல்குரியைச் சேர்ந்த கரிமுல் ஹக் என்ற தேயிலைத் தோட்ட தொழிலாளி, விபத்துகளில் சிக்குவோரை தனது மோட்டார் சைக்கிள் மூலம் உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் கொண்டு சேர்க்கும் அளப்பரிய பணியை செய்துவருகிறார். இதுவரை 2,000 பேரின் உயிரை காப்பாற்றியுள்ள அவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி, மத்திய அரசு கௌரவித்தது.

  பிரதமர் மோடிக்கு எதிராக இடதுசாரிகள் வெறுப்புணர்வு பிரசாத்தை மேற்கொண்டு வருகின்றனர். இடதுசாரிகளின் ஆட்சி உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டது. இந்தியாவிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டது என்றார் அவர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai