சுடச்சுட

  

  பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய யூனியன் வெளியுறவுக் கொள்கை தலைவர் சந்திப்பு

  By DIN  |   Published on : 22nd April 2017 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, ஐரோப்பிய யூனியன் அமைப்பின் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கை தலைவர் பெட்ரிகா மொஹர்ஜனி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
  இந்தியாவுக்கு 2 நாள் அரசுமுறை பயணமாக மெஹர்ஜினி வந்துள்ளார். தில்லியில் அவர், பிரதமர் மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், 'பிரதமர் மோடியும், மொஹர்ஜனியும், பிராந்திய விவகாரம் குறித்தும், பரஸ்பரம் பயனளிக்கும் உலக விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்; பயங்கரவாத எதிர்ப்பு உள்பட இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே பாதுகாப்பு துறையில் நிலவும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இருவரும் ஒப்புக் கொண்டனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்னதாக, தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் பெட்ரிகா மொஹர்ஜனி சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள் இருவரும் தில்லியில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள இந்தியா-ஐரோப்பிய யூனியன் அமைப்புக்கு இடையேயான வருடாந்திர மாநாட்டுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.
  இதையடுத்து வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் தலைமையிலான குழுவுடன், மெஹர்ஜினி தலைமையிலான ஐரோப்பிய யூனியன் அமைப்புக் குழு ஆலோசனை நடத்தியது. இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியன் அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் சில நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்கள் விரைவில் காலாவதியாகவுள்ளன. இதைச் சுட்டிக்காட்டிய ஐரோப்பிய யூனியன் அமைப்புக் குழு, இந்த ஒப்பந்தங்களை 6 மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் இருதரப்பு வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai