சுடச்சுட

  
  bomos

  வங்காள விரிகுடா கடலில் இருந்து வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை சோதிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை.

  இந்தியா-ரஷியா கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை இந்திய கடற்படை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்தது.
  உலகிலேயே மிகவும் அதிவேக ஏவுகணையாக கருதப்படும் பிரம்மோஸ் ஏவுகணையை இந்திய ராணுவம் தொடர்ந்து சோதித்து வருகிறது. இந்நிலையில், இந்திய கடற்படையும் அந்த ஏவுகணையை வெள்ளிக்கிழமை பரிசோதித்துள்ளது.
  இதுகுறித்து இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வங்காள விரிகுடா கடலில் வைத்து நிலத்தில் உள்ள எதிரியின் இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான பிரம்மோஸ் ஏவுகணையை இந்திய கடற்படை ஏவி பரிசோதித்தது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது' என்றார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai