சுடச்சுட

  

  பிற்படுத்தப்பட்டோர் ஆணைய மசோதா: மழைக்காலக் கூட்டத்தொடரில் அறிக்கை

  By DIN  |   Published on : 22nd April 2017 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  venkia

  பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து கிடைக்க வகை செய்யும் மசோதா தொடர்பான மாநிலங்களவைக் குழுவின் அறிக்கையானது, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
  இதுகுறித்து ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:
  சமூக மற்றும் கல்வி ரீதியிலான பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து கிடைக்க வகை செய்யும் மசோதாவை அரசு இயற்றியுள்ளது.
  இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் நீண்டகால கோரிக்கையை பிரதமர் நரேந்தர மோடி நிறைவேற்றியுள்ளார். இந்த மசோதாவானது மக்களவையில் கடந்த 10-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டுவிட்டது. எனினும், சில காரணங்களால் மாநிலங்களவையில் இந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற முடியவில்லை.
  தற்போது மாநிலங்களவைக் குழுவின் பரிசீலனையில் இந்த மசோதா உள்ளது. இந்தக் குழுவின் ஆய்வறிக்கையானது வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் சமர்ப்பிக்கப்படும்.
  மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற, அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த மசோதா நிறைவேறும்பட்சத்தில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அனைத்துவிதமான நலன்களையும் பெறுவார்கள் என்றார் வெங்கய்ய நாயுடு.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai