சுடச்சுட

    

    மத்திய அரசின் தடை எதிரொலி: தேர்தல் ஆணைய வாகனங்களில் இருந்து சுழல் விளக்குகள் அகற்றம்

    By DIN  |   Published on : 22nd April 2017 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த சிவப்பு, நீல நிற சுழல் விளக்குகள் அகற்றப்பட்டுவிட்டன.
    மிகவும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்களில் சுழல் விளக்குகள் பொருத்தப்படும் கலாசாரத்துக்கு தடை விதித்து மத்திய அமைச்சரவை முடிவு செய்ததையடுத்து, தேர்தல் ஆணையம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
    இதுகுறித்து தில்லியில் தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தேர்தல் ஆணையத்தின் அனைத்து வாகனங்களில் இருந்தும் அனைத்து நிற சிவப்பு விளக்குகளும் அகற்றப்பட்டு விட்டன' என்றார்.
    தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட விவிஐபிக்கள் வாகனங்களில் சுழல் விளக்குகள் பொருத்தப்படும் நடைமுறைக்கு தடை விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
    இந்த நடைமுறை வரும் மே மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. எனினும், மத்திய அமைச்சரவையின் முடிவை, பல்வேறு தரப்பினரும் தற்போதே செயல்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai