சுடச்சுட

  

  மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியப் பயன்கள்: விரைவில் அறிவிப்பு

  By DIN  |   Published on : 22nd April 2017 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பயனளிக்கும் வகையில் புதிய ஓய்வூதியக் கணக்கீட்டு முறையை மத்திய அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது.
  இதன் மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.5,000 கோடி வரை பணப் பயன்கள் கிடைக்கும்.
  இந்த புதிய ஓய்வூதியக் கணக்கீட்டு முறைக்கு அடுத்த வாரம் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட இருக்கிறது.
  புதிய ஓய்வூதியக் கணக்கீட்டின்படி, ஓய்வுபெற்ற மத்திய அரசு பணியாளர் ஒவ்வொருவருக்கும், அவர் முன்பு வகித்த பதவியை தற்போது வகித்து வருபவருக்கு வழங்கப்படும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் கணக்கிடப்படும்.
  ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அவ்விதம் அதிகரிக்கப்படும் ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியமும் கணக்கிடப்படும்.
  இதன்படி, 6-ஆவது ஊதியக் குழு காலகட்டத்தில் மத்திய அரசுத் துறையில் இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவருக்கு, 7-ஆவது ஊதியக் குழு அமலான பிறகு அப்போதைய இயக்குநருக்கு நிர்ணயிக்கப்படும் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் கணக்கிடப்படும். மேலும், ஓய்வுகால பணிக்கொடை, இறப்பின்போது வழங்கப்படும் பணிக்கொடை ஆகியவை அதிகபட்சம் ரூ.20 லட்சமாக நிர்ணயிக்கப்படவுள்ளது. இதுதவிர அகவிலைப்படியும் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படவுள்ளது.
  மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பயன்தரும் இந்த ஓய்வூதியக் கணக்கீட்டு முறையை ஓய்வூதியத் துறைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்தது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai