சுடச்சுட

  

  முலாயம் சிங் அரசு அறிமுகப்படுத்திய உயர்ந்த விருது திட்டம் குறித்து ஆய்வு: யோகி ஆதித்யநாத் உத்தரவு

  By DIN  |   Published on : 22nd April 2017 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  yogiadi

  உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான அரசு அறிமுகப்படுத்திய மிக உயர்ந்த விருது வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
  உத்தரப் பிரதேச கலாசாரத் துறை சார்பில் லக்னௌவில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.
  அப்போது, கலாசாரத் துறை தொடர்பாக முதல்வருக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
  அப்போது, முலாயம் சிங் யாதவ் அரசால் கொண்டுவரப்பட்ட 'யஷ் பாரதி' விருது வழங்கும் திட்ட விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
  இதுதவிர, ஓய்வூதியத் திட்டம், ஸ்மார்ட்ஃபோன் திட்டம், லக்னௌ- ஆக்ரா விரைவு நெடுஞ்சாலை திட்டம் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யுமாறு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
  'யஷ் பாரதி' விருது உத்தரப் பிரதேச அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த, கௌரவமிக்க விருதாகும்.
  இந்தத் திட்டத்தை கடந்த 1994-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் முலாயம் சிங் யாதவ் கொண்டுவந்தார்.
  இலக்கியம், சமூகப் பணி, மருத்துவம், கலைத் துறை, அறிவியல், கலாசாரம், கல்வி, இசை, நாடகம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் மிகச் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு 'யஷ் பாரதி' விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுடன் சான்றிதழும், ரூ.11 லட்சம் ரொக்கமும் அளிக்கப்படும்.
  விருது பெற்றவர்கள் விரும்பும்பட்சத்தில் மாதந்தோறும் ரூ.50ஆயிரம் ஓய்வூதியமும் அவர்களுக்கு அளிக்கப்படும்.
  'யஷ் பாரதி' விருது தகுதியற்றவர்களுக்கு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இத்தகைய உத்தரவை முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார்.
  இந்த விருது திட்டம் மாயாவதி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது.
  பின்னர், கடந்த 2015-ஆம் ஆண்டு முலாயம் சிங்கின் மகனும், சமாஜவாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் மீண்டும் தொடங்கி வைத்தார். இந்த விருதை பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai