சுடச்சுட

  

  மேற்கு வங்க மாநிலத்தில் வெடிகுண்டு தயாரிப்பில் சமூக விரோதிகள் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அது வெடித்ததில், 8 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
  இதுகுறித்து பிர்பூம் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் என்.சுதீர் குமார் கூறியதாவது: பிர்பூம் மாவட்டம், தர்பர்பூர் என்ற கிராமத்தில் சில சமூக விரோதிகள் வெடிகுண்டு தயாரிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். அப்போது, வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.
  இதில், சம்பவ இடத்திலேயே 4 பேரும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேரும் உயிரிழந்தனர்.
  மேலும் 4 பேர் காயமடைந்தனர். இரு கும்பலுக்கு இடையே மோதல் இருந்து வந்ததும், அவர்களில் ஒரு தரப்பினர் வெடிகுண்டுகள் தயாரிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் சுதீர் குமார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai