சுடச்சுட

  

  வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்தில் கபில்தேவ், டாப்ஸி

  By DIN  |   Published on : 22nd April 2017 11:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புது தில்லி: மாநகராட்சித் தேர்தலில், ஜனநாயகக் கடமையாற்ற வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் தில்லி தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள விழிப்புணர்வு பிரசாரத்தில் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், எழுத்தாளர் சேத்தன் பகத், நடிகை டாப்ஸி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
  "தகட்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த விழிப்புணர்வுப் பிரசாரம் குறித்து மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
  கிரிக்கெட் வீரர்களான கபில்தேவ், கெளதம் கம்பீர், எழுத்தாளர் சேத்தன் பகத், நடிகைகள் டாப்ஸி, ஹீமா குரேஷி உள்ளிட்டோரை வாக்காளர் விழிப்புணர்வுப் பிரசார விளம்பரங்களில் பங்கேற்கச் செய்துள்ளோம்.
  அத்தகைய விளம்பரங்களை தில்லி மெட்ரோ உள்ளிட்ட பொது இடங்களில் மக்களின் பார்வையில் படும் வகையில் விளம்பரப்படுத்தவும், செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதனிடையே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கூரிய 5 பிரபலங்களும் ஒன்றாக காட்சியளிக்கும் வகையிலான விளம்பரங்களை வெளியிட உள்ளோம்.
  வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கூடுதல் தகவல்களையும் வெளியிட உள்ளோம். வாக்களிக்கும் விரலை மனிதனாக சித்திரித்து விளம்பரம் வெளியிட்டுள்ளோம்.
  தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக மாநகராட்சித் தேர்தலுக்கு பெரிய அளவில் கட்சிகள் பிரசாரம் மேற்கொள்கின்றன. எனவே, அதே அளவுக்கு ஜனநாயகக் கடமையாற்றும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளோம். கடந்த 2012 மாநகராட்சித் தேர்தலில் 54 சதவீத வாக்குகளே பதிவானது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai