சுடச்சுட

  

  வீடுதேடி பெட்ரோல்-டீசல் விநியோகம்: மத்திய அரசு ஆலோசனை

  By DIN  |   Published on : 22nd April 2017 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Petrolpump

  வாகன ஓட்டிகளின் வீடு தேடி, பெட்ரோல்-டீசலை விநியோகம் செய்வது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
  இதுகுறித்து சுட்டுரையில் பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  நாடு முழுவதும் இருக்கும் 59,595 பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு நாள்தோறும் 3.5 கோடி பேர் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலை வாங்குவதற்காக வருகை தருகின்றனர். உச்சகட்ட நேரத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகளின் கூட்டம் மிகுதியாக காணப்படுவதால், சாலைகளில் நெரிசல் ஏற்படுகிறது.
  இதுபோல், ஆண்டுதோறும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.2,500 கோடி மதிப்புக்கு பெட்ரோல்-டீசல் விற்பனையாகிறது. இதன் ஒரு பகுதியை தற்போது வாகன ஓட்டிகளின் வீடு தேடி சென்று விநியோகிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
  வாகன ஓட்டிகள் தங்களது தேவை குறித்து முன்பதிவு செய்யும்போது அவர்கள் குறிப்பிடும் இடங்களுக்கு வந்து பெட்ரோல்-டீசலை விநியோகிப்பது குறித்த உபாயங்கள் ஆராயப்படுகிறது.
  வீடு தேடி சென்று பெட்ரோல்-டீசலை அளிப்பதால், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் காத்திருந்து தங்களது நேரத்தை வாகன ஓட்டிகள் வீணாக்குவதை தவிர்க்க முடியும். மேலும், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசை நிலவுவதையும் தவிர்க்கலாம் என்று அந்த பதிவுகளில் பெட்ரோலியத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
  சுட்டுரையில் பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் மற்றோர் பதிவில், 'பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் பணம் செலுத்துவதை டிஜிட்டல் மயமாக்குவது குறித்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் நாடாளுமன்றக் குழு வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தியது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai