சுடச்சுட

  

  அரசு இணையதளத்திலேயே கசிந்த ஆதார் விபரங்கள்: இது ஜார்க்கண்ட் கலாட்டா!

  By DIN  |   Published on : 23rd April 2017 04:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  aadhaar

   

  ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அரசு இணையதளத்திலேயே பத்து லட்சத்திற்கும் அதிகமானோரின் ஆதார் அடையாள அட்டையின் விபரங்கள் வெளியான சம்பவமானது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ஜார்க்கண்ட் மாநில அரசினால் பராமரிக்கப்படும் அரசு இணையதளத்தில் ஏற்பட்ட புரோகிராமிங் பிழை காரணமாக, அதில்பதிவு செய்யப்பட்டிருந்த 10 லட்சத்திற்கும் அதிகமானோரின் ஆதார் அட்டை விபரங்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஆதார் அடையாள அட்டைகளில் எண், முகவரி மற்றும் ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் கைரேகை தொடர்பான தகவல்கள் அனைத்தும் வெளியாகிஉள்ளது.

  அத்துடன் ஜார்க்கண்ட் மாநில ஓய்வூதிய திட்டத்தில் பயன் பெறுவோரின் வங்கி கணக்கு தகவல்களும் தற்பொழுதுவெளியாகி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுமார் 1.6 மில்லியனுக்கு அதிகமான ஓய்வூதியதாரர்கள் உள்ளனர், இவர்களில் 1.4 மில்லியன் பேர் அவர்களுடைய வங்கி கணக்குடன் ஆதார் அடையாள அட்டை விபரங்களை இணைந்து உள்ளனர்.

  அரசின் இணையதளத்தின் உள்ளே நுழையும் எவரும் எளிதாக தகவல்களை பெற்றுக் கொள்ளமுடியும்,. இணையதளத்திற்கு உள் செல்லும் போது அரசு குறிப்பிட்ட பயனாளிக்கு எவ்வளவு ஓய்வூதியம் வழங்குகிறது என்பது உள்பட பல்வேறு தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக கிடைக்கிறது.

  இந்த தகவலகசிவு விவகாரம் தொடர்பாக யுஐடிஏஐ எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பதில் அளிக்கவில்லை. ஜார்க்கண்ட் மாநில சமூகநல துறை செயலாளர் பாதியா இந்த விவகாரம் குறித்து பேசும் பொழுது, “இவ்விவகாரம் தொடர்பான பிரச்சனை இந்த வாரம்தான் எங்களுடைய கவனத்திற்கு தெரிய வந்துள்ளது. கணினி பொறியாளர்கள் மூலம் விரைவில் பிரச்சனையானது சரிசெய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai