சுடச்சுட

  

  இயற்கையைப் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்: பிரதமர் மோடி

  By DIN  |   Published on : 23rd April 2017 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  இயற்கையையும், இயற்கை வளங்களையும் பாதுகாப்பதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
  உலக புவி தினத்தையொட்டி, அவர் தனது சுட்டுரைப் பக்கங்களில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
  உலக புவி தினம், பூமித்தாய்க்கு நன்றி செலுத்தும் நாளாகும். அதுமட்டுமன்றி, இந்தப் பூமியை பசுமையாகவும், தூய்மையாகவும் பாதுகாப்பதற்கு உறுதியேற்கும் நாளும் இதுவாகும்.
  இந்தப் பூமியில் உள்ள தாவரங்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றுடன் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டியது நமது கடமையாகும். நமது எதிர்கால சந்ததிக்காக இந்தக் கடமைகளை நாம் செய்தாக வேண்டும்.
  நிகழாண்டில், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், இயற்கையையும், இயற்கை வளங்களையும் பாதுகாப்பது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு உருவாகும் என்று நம்புகிறேன் என்று மோடி தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai