சுடச்சுட

  

  எரிசக்தி, நிலக்கரித் துறையில் ஒத்துழைப்பு: இந்தியா - இந்தோனேசியா இடையே ஒப்பந்தம்

  By DIN  |   Published on : 23rd April 2017 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியா- இந்தோனேசியா இடையே எண்ணணெய் வளம், நிலக்கரி, மின்சாரம், எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா - இந்தோனேசியா இடையே எரிசக்தித் துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது.

  இந்தக் கூட்டத்தில், இந்தோனேசிய எரிசக்தித் துறை அமைச்சர் இக்னேஷியஸ் ஜோனனை மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுதொடர்பாக, அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை கூறியதாவது:
  இந்தோனேசியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை தரம் உயர்த்துவது, இந்தியாவில் உள்ள எரிவாயு ஆலைகளை இந்தோனேசியாவுக்கு இடம் மாற்றுவது, இந்தியாவில் மரபுசாரா எரிசக்தி மற்றும் எல்இடி விளக்குகள் பயன்பாடு ஆகியவற்றால் விளைந்த நன்மைகளைப் பகிர்ந்துகொள்வது, இந்தோனேசியாவில் எரிசக்தித் துறையில் பின்பற்றப்படும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்வது என பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன என்று பியூஷ் கோயல் கூறினார்.
  இதனிடையே, மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து ஆராய்வதற்காக, நிலக்கரி, மின்சாரம், எண்ணெய் வளம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 19 அதிகாரிகள் விரைவில் இந்தியா வருவார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai