சுடச்சுட

    

    காஷ்மீர் மக்களுக்கு எதிராக பதாகைகள்: உ.பி. நவநிர்மாண் சேனைத் தலைவர் கைது

    By DIN  |   Published on : 23rd April 2017 11:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    AMITJANI

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் காஷ்மீர் மக்களுக்கு எதிராக பதாகைகள் வைத்தது தொடர்பாக, நவநிர்மாண் சேனை அமைப்பின் மாநிலத் தலைவர் அமித் ஜானியை போலீஸார் கைது செய்தனர்.

    உத்தரப் பிரதேசத்தில், தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள கல்லூரிகளுக்கு முன்பு, ""உத்தரப் பிரதேசத்தில் இருந்து காஷ்மீர் மாநிலத்தவர்கள் வெளியேற வேண்டும்'' என்று நவநிர்மாண் சேனை அமைப்பு சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அங்குள்ள கல்லூரிகளில், காஷ்மீர் மாணவர்கள் அதிகம் பயின்று வருகிறார்கள்.
    மேலும், காஷ்மீர் மாநிலத்தவர் தாங்களாகவே வெளியேறாவிட்டால், வரும் 30-ஆம் தேதி முதல் அவர்களுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாகவும் அமித் ஜானி எச்சரிக்கை விடுத்திருந்தார். அதையடுத்து, அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், அவர் தலைமறைவாக இருந்தார்.
    இந்நிலையில், அவர் சிறப்பு நீதிமன்றத்தின் முன் சரணடைவதாக தனது வழக்குரைஞர் மூலமாக சனிக்கிழமை மனு அளித்தார். அதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதால், அந்த மாநில மக்களுக்கு எதிராக பதாகைகள் வைத்ததாக, போலீஸார் நடத்திய விசாரணையின்போது அமித் ஜானி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai