சுடச்சுட

  

  சர்வதேச மத்தியஸ்த மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது

  By DIN  |   Published on : 23rd April 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  khear

  "சர்வதேச மத்தியஸ்த மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது' என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் கூறினார்.
  தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற அவர், இது தொடர்பாக பேசியதாவது:
  மத்திய அரசின் "இந்தியாவின் தயாரிப்போம்' திட்டத்தால், சர்வதேச நிறுவனங்களின் விருப்பத்துக்கு உகந்த சந்தையாக இந்தியா உருவெடுக்கும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பதன் காரணமாக, இந்தியாவில் மத்தியஸ்த நடைமுறைகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
  இந்தியாவில் திறமை வாய்ந்த வழக்குரைஞர்களும், மத்தியஸ்தர்களும் ஏராளமாக இருக்கின்றனர். இதன் காரணமாக, சர்வதேச மத்தியஸ்த மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. மத்தியஸ்த நடைமுறையில் அரசு மற்றும் அரசு அமைப்புகளின் தலையீடு சிறிதளவும் இருக்கக் கூடாது என்று மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
  இதன் மூலம், இந்தியாவில் மத்தியஸ்த நடைமுறை நடுநிலையுடன் இருக்கும் என்ற நம்பிக்கை, சர்வதேச வர்த்தகர்கள் இடையே ஏற்படும் என்றார் கேஹர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai