சுடச்சுட

  

  சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை ஒடிஸா எழுப்பும்:  நவீன் பட்நாயக்

  By DIN  |   Published on : 23rd April 2017 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  naveen_patnaik

  தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) கூட்டத்தில் ஒடிஸாவுக்கு சிறப்புப் பிரிவு அந்தஸ்து வழங்குமாறு கோரிக்கை வைக்கப்படும் என்று மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
  தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய கொள்கைக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக நவீன் பட்நாயக், புவனேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார். தனது 5 நாள் பயணமாக தில்லி புறப்படும் முன் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
  ஒடிஸா மாநிலத்துக்கு சிறப்புப் பிரிவு அந்தஸ்து வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரி வருகிறோம். மத்திய கொள்கைக் குழுக் கூட்டத்தில் இந்த கோரிக்கையை மீண்டும் எழுப்புவோம். ஒடிஸாவுக்கு சிறப்பு நிதிச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் நான் வலியுறுத்துவேன். மேலும் ஒடிஸா மாநிலத்துக்குத் தொடர்புடைய சில பிரச்னைகளை விவாதிக்க அந்தந்தத் துறைக்கான மத்திய அமைச்சர்களை சந்திக்கவும் நேரம் கேட்டிருக்கிறேன்.
  வரவிருக்கும் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக பிராந்தியக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பாஜக கூறி வருவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதுபோன்று பாஜகவிடம் பேசும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்றார் நவீன் பட்நாயக்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai