சுடச்சுட

  

  ஜாதவை தூக்கிலிட்டால் பலூசிஸ்தானை தனி நாடாக இந்தியா அறிவிக்க வேண்டும்

  By DIN  |   Published on : 23rd April 2017 11:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  subramanian swami

  முன்னாள் இந்தியக் கடற்படை வீரர் குல்பூஷண் ஜாதவ் தூக்கிலிடப்பட்டால், பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக இந்தியா அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எம்.பி.யும், பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

  குஜராத் மாநிலம், வதோதராவில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் "இந்தியாவும் சர்வதேச பயங்கரவாதமும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  இதில் பங்கேற்று சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது: பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ள வேண்டும்.
  அதனையும் மீறி, குல்பூஷண் ஜாதவ் தூக்கிலிடப்பட்டால் பாகிஸ்தானில் உள்ள சர்ச்சைக்குரிய பலூசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக இந்தியா அறிவிக்க வேண்டும்.
  அதுமட்டுமின்றி, பாகிஸ்தானை பலூசிஸ்தான், பக்துனிஸ்தான், சிந்த் என மூன்று நாடுகளாக பிரிக்க வேண்டும். இதுதான் பாகிஸ்தானுக்கு இந்தியா புகட்டும் சிறந்த பாடமாக இருக்கும்.
  பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு நாடு என்று அறிவிப்பதால் மட்டும் எந்த விளைவுகளும் ஏற்படப் போவதில்லை. மாறாக, பாகிஸ்தானின் ஒருங்கிணைப்பை சீர்குலைப்பது ஒன்றே எல்லை பயங்கரவாதத்துக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்.
  அதேபோல், பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் முக்கிய பயங்கரவாதிகளான ஹஃபீஸ் சயீது மற்றும் தாவூத் இப்ராஹிம் ஆகியோரின் வீடுகளில் அதிரடி தாக்குதல்களை இந்தியா ராணுவம் நடத்த வேண்டும்.
  பாகிஸ்தானிலிருந்து உற்பத்தியாகும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அமெரிக்காவின் உதவியை இந்தியா கேட்க வேண்டும் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai