சுடச்சுட

  

  "ஜெனரிக்' மருந்துகளை பரிந்துரைக்காத மருத்துவர்கள் மீது நடவடிக்கை

  By DIN  |   Published on : 23rd April 2017 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ""மருத்துவ சிகிச்சைப் பெற வரும் நோயாளிகளுக்கு "ஜெனரிக்' மருந்துகளையே மருத்துவர்கள் பரிந்துரை செய்ய வேண்டும்; இல்லாவிடில் கடுமையான நடவடிக்கையை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும்'' என்று இந்திய மருத்துவக் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  நோயாளிகளுக்கு குறைந்த விலையிலான "ஜெனரிக்' மருந்துகளை (அடிப்படை மூலக்கூறு மருந்துகள்) மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வகையில் விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
  இந்த நிலையில், மருந்துகள் பரிந்துரை தொடர்பாக, அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் தலைவர்கள், மருத்துவமனைகளின் இயக்குநர்கள், அனைத்து மாநில மருத்துவக் கவுன்சில்களின் தலைவர்கள் ஆகியோருக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் சுற்றறிக்கை ஒன்றை சனிக்கிழமை அனுப்பியது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
  இந்திய மருத்துவக் கவுன்சிலின் 2016-ஆம் ஆண்டின் அறிவிக்கையின்படி, நோயாளிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரை செய்யும்போது, அவற்றின் "பிராண்ட்' பெயர்களுக்குப் பதிலாக, அடிப்படை மூலக்கூறு மருந்தின் பெயரையே மருத்துவர்கள் கட்டாயம் பரிந்துரை செய்ய வேண்டும்.
  இந்த அறிவிக்கையை, இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்து மருத்துவர்களும் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும். இவ்வாறு பரிந்துரை செய்யாத மருத்துவர்கள், கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai