சுடச்சுட

  

  தலாக் கூறிய கணவர் மீது வழக்கு: விவாகரத்தை ரத்து செய்தது ம.பி. நீதிமன்றம்

  By DIN  |   Published on : 23rd April 2017 11:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தலாக் முறையில் நடைபெற்ற விவாகரத்தை ரத்து செய்து மத்தியப் பிரதேச குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
  இஸ்லாமிய புனித நூலான குரானில் கூறியுள்ளபடி இந்த தலாக் விவாகரத்து நடைபெறவில்லை என்றும் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த தௌசிஃப் ஷேக், அர்ஷி கான் தம்பதிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சில மாதங்களிடையே தெளசிஃப் வரதட்சிணையாக கூடுதல் பணம் கேட்டு மனைவியை தொந்தரவு செய்தார். அவர் கேட்டத் தொகையை அர்ஷி குடும்பத்தினரால் கொடுக்க முடியவில்லை. இதனால், அர்ஷி தனது பெற்றோர் விட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், டெளசிஃப் மீது வரதட்சிணை கொடுமை புகாரை அர்ஷி அளித்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
  இதனிடையே, அர்ஷியிடம் மூன்றுமுறை தலாக் கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டதாக தௌசிஃப் அறிவித்தார். இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பி வைத்தார். கணவர் தன்னை விவாகரத்து செய்த முறையை எதிர்த்து அர்ஷி சார்பில் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், இஸ்லாமிய மதத்தில் கூறப்பட்டுள்ள முறைப்படி தன்னை கணவர் விவாகரத்து செய்யவில்லை; தனது முன்னிலையில் அவர் முறைப்படி தலாக் கூறவில்லை என்று அர்ஷி சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
  அதே நேரத்தில், தெளசிஃப் தரப்பில் அவர் முறைப்படி தலாக் கூறி விவாகரத்து பெற்றதை நிரூபிக்கவில்லை. இதையடுத்து, இஸ்லாமிய புனித நூலில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின்படி தெளசிஃப் தனது மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்று கூறிய நீதிமன்றம், அத்தம்பதியின் விவாகரத்தை செல்லாது என்று அறிவித்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai