சுடச்சுட

  
  cmdelhi

  தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை தில்லியில் சனிக்கிழமை இரவு மலர்க் கொத்து கொடுத்து வரவேற்கும் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை.

  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை இரவு தில்லி வந்தார்.
  தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு தில்லிக்கு இரவு 8.30 மணியளவில் வந்தடைந்தார். அவர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார்.
  இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23) காலை 9.45 மணியளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அரங்கில் நடைபெறும் மத்திய கொள்கைக் குழுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை இக்கூட்டம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவே அவர் சென்னைக்கு புறப்பட்டுச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
  இதற்கிடையே, தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் குழுவினரை அவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai