சுடச்சுட

  

  தில்லியிலுள்ள மூன்று மாநகராட்சிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
  வடக்கு தில்லி, தெற்கு தில்லி மாநகராட்சிகளில் தலா 104 வார்டுகளும், கிழக்கு தில்லி மாநகராட்சியில் 64 வார்டுகளும் உள்ளன. இந்த வார்டுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.
  பாஜக, காங்கிரஸ், ஆளும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 2,886 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்தத் தேர்தலில் 59 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்பட மொத்தம் 1,32 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்குச் சீட்டு முறை மூலம் தேர்தலை நடத்த வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்திய போதிலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலமே தேர்தல் நடைபெறுகிறது.
  தில்லி மாநகராட்சித் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக "எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' (நோட்டா) என்ற வாய்ப்பு தற்போதைய தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  மாநகராட்சித் தேர்தலையொட்டி பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அண்டை மாநிலங்களிலிருந்து 56,256 காவலர்கள் தில்லிக்கு வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 24,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  தேர்தலில் பதிவாகும் வாக்குகள், வரும் 26-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
  பலமுனைப் போட்டி: தில்லி மாநகராட்சிகளில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. தற்போதைய தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே முக்கியப் போட்டி நிலவினாலும், ஆம் ஆத்மி முன்னாள் தலைவர் யோகேந்திர யாதவின் ஸ்வராஜ் இந்தியா, ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai