சுடச்சுட

  

  நவி மும்பையில் கார் விற்பனை நிலையத்தில் பயங்கர தீ: 2 பேர் பலி

  By DIN  |   Published on : 23rd April 2017 06:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நவி மும்பையில் உள்ள கார் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று நேரிட்ட பயங்கர தீவிபத்தில் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

  நவி மும்பை பகுதியில், பிரம்மாண்டமான கார் விற்பனை நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இக்கட்டடத்தில், இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென்று கட்டிடத்தின் அனைத்து பகுதிக்கும் பரவியதால், அப்பகுதியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது.

  தீ விபத்து குறித்து அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

  இந்த திடீர் தீ விபத்தில் நிறுவனத்தில் பணியில் இருந்த 2 பேர் புகை மூட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  தீ விபத்துக்கான காரணம் எதுவும் ஏதுவரை வெளியாகவில்லை. விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai