சுடச்சுட

  

  நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: முப்படைத் தளபதிகள் ஆலோசனை

  By DIN  |   Published on : 24th April 2017 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாட்டின் பாதுகாப்புக்கு உள்நாட்டில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் குறித்து முப்படைத் தளபதிகளும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
  தில்லியில் 6 நாள்கள் நடைபெற்ற இந்த மாநாடு சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதில் இந்திய ராணுவ தலைமை தளபதி விபின் ராவத், கடற்படை தலைமை தளபதி சுனில் லாம்பா, விமானப்படை தலைமை தளபதி பி.எஸ். தனோவா மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
  மாநாட்டில் நாட்டின் பாதுகாப்புக்கு உள்நாட்டில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், இந்திய ராணுவத்தை நவீனமயமாக்கும் திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
  நாட்டுக்கு எழும் முக்கிய சவால்களை முப்படைகளும் எதிர்கொள்வது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
  மாநாட்டில் இந்திய ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் பேசியபோது, ராணுவ வீரர்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஆக்கபூர்வமான கொள்கையை வகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
  இதுதொடர்பாக ராணுவம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "ராணுவத்தை நவீனப்படுத்துதல் தொடர்பான திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டது.
  மாநாட்டில் கடற்படை தலைமை தளபதி சுனில் லாம்பா, விமானப்படை தலைமை தளபதி பி.எஸ். தனோவா ஆகியோர் பேசியபோது, நாட்டின் பாதுகாப்புக்கு எழும் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதில் முப்படைகளும் இணைந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பான கூட்டு கோட்பாட்டை உருவாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai