சுடச்சுட

  
  aravind

  தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "நீதி ஆயோக்' அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் புறக்கணித்து விட்டனர்.

  இதுகுறித்து தில்லி வட்டாரத் தகவல்கள் கூறியதாவது:

  தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நீதி ஆயோக் அமைப்பின் 3-ஆவது நிர்வாகக் குழு கூட்டத்தில் மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் தில்லி முதல்வர் கேஜரிவால் தனக்குப் பதிலாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை அனுப்பியிருந்தார்.
  அதேபோல், இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்களுக்கு பதிலாக அரசு அதிகாரிகள் கலந்து கொள்வதற்கு பிரதமர் மோடி அனுமதியளிக்க மறுத்துவிட்டார். மாநில முதல்வர் அல்லது துணை முதல்வர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதனால் பெரும்பாலான முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

  எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி, ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

  மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், சுரேஷ் பிரபு, பிரகாஷ் ஜாவ்டேகர், ராவ் இந்தர்ஜித் சிங், ஸ்மிருதி இரானி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai