சுடச்சுட

  

  மது விற்பனை தொடர்பாக நீதிமன்றங்கள் முடிவெடுக்கக் கூடாது

  By DIN  |   Published on : 23rd April 2017 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ""மது விற்பனை தொடர்பாக அரசே முடிவெடுக்க வேண்டும்; நீதிமன்றங்கள் அல்ல'' என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத் கூறியிருக்கிறார்.
  தேசிய நெடுஞ்சாலை அல்லது மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் மதுபானங்களை விற்பனை செய்வதற்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை விமர்சிக்கும் வகையில், சஞ்சய் ராவத் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
  மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், இதுதொடர்பாக, அவர் மேலும் பேசியதாவது:
  மதுபான விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டுமெனில், முதலில் அரசு மானியத்துடன் இயங்கும் நீதிபதிகள் மனமகிழ் மன்றங்கள் மூடப்பட வேண்டும். நீதித் துறையில் இருப்பவர்கள் அனைத்து வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு, மக்களின் வாழ்க்கையில் உள்ள அனைத்து மகிழ்ச்சியான விஷயங்களையும் அழித்து வருகிறார்கள்.
  ஜனநாயக நாட்டில், மக்களை கொஞ்சமாவது மகிழ்ச்சியாக இருக்க அனுமதிக்க வேண்டும்.
  நீதிமன்றங்கள் புதிய ஆட்சியாளர்களாக மாறிவிட்டன என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai