சுடச்சுட

  

  முலாயம் சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பை ரத்து: முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி

  By DIN  |   Published on : 23rd April 2017 02:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  yogiadi

  உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், மாயவதி உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்டு வந்த முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக திரும்பப் பெற்றுள்ளார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் சிலருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

  உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் யோகி ஆதித்யநாத், தொடக்கத்திலிருந்தே பல அதிரடியான நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் மேற்கொண்டு வருகிறார்.

  இதன் தொடர்ச்சியாக தற்போது, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான முலாயம் சிங் யாதவ், மாயாவதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பை அதிரடியாக ரத்து செய்துள்ளார். 151 முக்கிய பிரமுகர்களில் 105 பேரின் பாதுகாப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள அவர், எஞ்சிய 45 பேரின் பாதுகாப்பையும் குறைத்துள்ளார்.

  மேலும், அம்மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வினய் கட்டியாவிற்கு இசட் பிரிவு எனப்படும் கருப்புப் பூனை படை பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

  நேற்றிரவு முதலே இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai