சுடச்சுட

  

  வடகிழக்கு மாநிலமான மேகங்லயத்தின் தென்மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தில் இடைவிடாது பெய்துவரும் மழை காரணமாக 7 கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  தென்மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. வேளாண் நிலங்களிலும் நீர் தேங்கியுள்ளது.
  கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளைச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்த மாநில முதல்வர் முகுல் சங்மா உத்தரவிட்டுள்ளார். பலத்த மழை பெய்துவரும் 7
  கிராமங்களில் வெள்ளம் ஏற்படவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai