சுடச்சுட

  

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பட்காம் மாவட்டத்தில் ராணுவ நிலை மீது தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
  இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பட்காம் மாவட்டம், ஹயாத்போரா என்ற கிராமத்தில் உள்ள பாதுகாப்பு நிலை மீது பயங்கரவாதிகள் சனிக்கிழமை திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். பாதுகாப்புப் படை வீரர்கள் திருப்பிச் சுட்டதில் பயங்கரவாதிகள் 2 பேரும் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளும், வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai