சுடச்சுட

  
  isro

  இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) செலுத்தும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 12 என்ற அளவில் அதிகரிக்கப்படும் என்று அதன் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் தெரிவித்தார்.
  ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர் இது தொடர்பாகக் கூறியதாவது:
  தொடக்கத்தில் நாம் ஆண்டுக்கு 2 முதல் 3 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி வந்தோம். பின்னர் அது 4 முதல் 5 செயற்கைக்கோள்களாக அதிகரித்தது. கடந்த சில ஆண்டுகளாக நாம் சராசரியாக ஆண்டுக்கு 7 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு வெற்றிகரமாகச் செலுத்தி வருகிறோம்.
  இப்போது 8 முதல் 9 பிஎஸ்எல்வி செயற்கைக்கோள்களை செலுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் ஆண்டுக்கு 12 ராக்கெட்டுகளைச் செலுத்தும் வகையில் இஸ்ரோவின் திறன் அதிகரிக்கும். இப்போது அனைத்து நவீன தொழில்நுட்பங்களையும் இஸ்ரோ பயன்படுத்துகிறது. எனவே, செயற்கைக்கோள்களை தயாரிப்பது, ராக்கெட்டுகளைச் செலுத்துவதற்கான செலவு குறைந்துள்ளதுடன், அவற்றின் செயல்பாட்டுத் திறனும் மேம்பட்டுள்ளது. இதனால், இஸ்ரோவால் அதிக செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்த முடியும்.
  விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்துக்கும் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அடுத்த ஆண்டில் சந்திரயான்-2 திட்டத்தை இஸ்ரோ தொடங்க இருக்கிறது. இது முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தில் அமையும் திட்டமாக இருக்கும்; ரஷியாவின் பங்களிப்பு இருக்காது.
  விண்ணுக்கு பலமுறை சென்றுவரக் கூடிய விண்வெளி ஓடத்தை தயாரிக்கும் திட்டமும் இஸ்ரோவிடம் உள்ளது. இது தொடர்பாக இப்போது பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது இந்திய விண்வெளித் துறையில் முக்கியமான சாதனையாக அமையும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai