சுடச்சுட

  

  ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் பணி தீவிரம்

  By DIN  |   Published on : 24th April 2017 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  hole-saveher

  ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி காவிரியை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர். (உள்படம்) சிறுமி காவிரி.

  ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம், ஜன்ஜரவாடா கிராமத்தைச் சேர்ந்த அஜித்- சவிதா தம்பதிக்கு அன்னபூர்ணா (7), காவிரி (6), பவன் (3) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.
  இந்த நிலையில், சவிதா தனது மகள் காவிரியுடன் சனிக்கிழமை மாலையில் வனப் பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்றுள்ளார்.
  அப்போது நிலத்தில் தோண்டப்பட்டிருந்த 400 அடி ஆழத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் காவிரி கால் தவறி விழுந்துள்ளார்.
  தகவலின் பேரில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ஹட்டி தங்கச் சுரங்க மீட்பு படையினர் உள்ளிட்டோர் அங்கு மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர் ஜெயராம், காவல் கண்காணிப்பாளர் ரவிகாந்த் கெளடா உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
  இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீட்புப் பணியை பார்த்து மயங்கி விழுந்த சவிதா, கோட்டகனூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவிலும் மீட்புப் பணி தொடர்ந்தது.
  இதுகுறித்து சிறுமியின் தந்தை அஜித் கூறியதாவது: காவிரியை மீட்கும் பணியில் அரசுத் துறையினர் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர். குழந்தையை உயிருடன் மீட்டுக் கொடுத்தால், அனைவருக்கும் நன்றியுடையவனாக இருப்பேன் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai