சுடச்சுட

  

  உஸ்மானியா பல்கலை. நூற்றாண்டு விழா: பிரணாப் பங்கேற்கிறார்

  By DIN  |   Published on : 24th April 2017 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pranab

  தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள நாட்டிலேயே மிக பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.
  நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துவரும் சிறப்பு அதிகாரியான எச். வெங்கடேஸ்வர்லு கூறியதாவது: உஸ்மானியா பல்கலைக்கழகம் கடந்த 1917-ஆம் ஆண்டில் வெறும் 25 பேராசிரியர்கள், 225 மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. இன்றைய சூழலில் இந்தப் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களும், 1,200 பேராசிரியர்களும் உள்ளனர்.
  நாட்டிலேயே மிகப் பழையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான இந்தப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா புதன்கிழமை (ஏப்.26) முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.
  முதல் நாள் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார் என்று வெங்கடேஸ்வர்லு தெரிவித்தார்.
  முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அஸாதுதீன் ஒவைஸி ஆகியோர் இந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai