சுடச்சுட

  

  காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை தூண்டிவிட்ட பாகிஸ்தான்!

  By DIN  |   Published on : 24th April 2017 10:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக 300க்கும் மேற்பட்ட வாட்ஸ் ஆப் சமூக வலைதளங்கள் மூலம் வன்முறையை தூண்டும் விதமாக இளைஞர்களை பாகிஸ்தான் தகவல்களை பறிமாறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

  காஷ்மீரில் நடைபெற்ற வன்முறையின் போது, பாதுகாப்புப் படையினர் நடவடிக்கைகளை சீர்குலைக்க, இளைஞர்களை தூண்டுவதற்காக 300க்கும் மேற்பட்ட வாட்ஸ் ஆப் குழுக்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

  காஷ்மீரில் கடந்த வாரம், ஸ்ரீநகர் மக்களவை தொகுதி இடைதேர்தலின் போது வன்முறை ஏற்பட்டதால், துப்பாக்கிச்சூட்டு நடத்தப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்ததால், காஷ்மீரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் வெடித்தன.

  இந்த சூழலில் இருவேறு சம்பவங்களில் முன்னாள் அரசு வழக்குரைஞர் உள்பட 2 பேரை தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர். இதைனைத்தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களின் போது, இளைஞர்கள் குழுக்கள், கோபத்தில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்கினர். வன்முறை தொடர்ந்ததால், அதனைக் கட்டுப்படுத்த எல்லை பாதுகாப்பு படையினர் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தினர்.

  இதில், இளைஞர்களை பாகிஸ்தான் சமூக வலைதளங்கள் மூலம் தூண்டி விடுவதாக இந்தியா குற்றம்சாட்டியது. அதனைத்தொடர்ந்து உள்துறை அமைச்சகம் தீவிர விசாரணை மேற்கொண்டது.

  இந்நிலையில், பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையை சீர்குலைக்கும் வகையில், 'ஜம்மு - காஷ்மீர் அரசை, மத்திய அரசு 'டிஸ்மிஸ்' செய்து விட்டது, பாதுகாப்பு படையினர் நடத்திய தடியடியில், 100 மாணவர்கள் காயமடைந்து விட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் சிலர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டு விட்டதாக இளைஞர்களை தூண்டுவதற்காக 300க்கும் மேற்பட்ட வாட்ஸ் ஆப் குழுக்கள் பயன்படுத்தி வதந்திகளை பரப்பி பாதுகாப்பு படையினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சிலரின் உதவியுடன் 250க்கும் மேற்பட்டோர், வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில், காஷ்மீரில் பதற்றம் தணியாத சூழலில், அம்மாநில முதல்வர் மெஹபூபா முப்தி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai