சுடச்சுட

  

  சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது: உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 24th April 2017 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான விநாயக் தாமோதர் சாவர்க்கருக்கு (படம்) பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.
  மகாராஷ்டிர மாநிலம், தாணேவில் சிவசேனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட "சாவர்க்கரின் எழுத்துகள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கின் நிறைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று உத்தவ் தாக்கரே பேசியதாவது:
  நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னாவை சுதந்திரப் போராட்ட தியாகி சாவர்க்கருக்கு அரசு வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் சிவசேனை மட்டுமின்றி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஒருமித்த கருத்தையே கொண்டிருக்கிறார்கள். எனவே, சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளில் நாம் ஈடுபட வேண்டும்.
  அதேபோல், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் சாவர்க்கர் அடைக்கப்பட்ட தனிமைச் சிறையின் மாதிரியை மும்பையில் அமைக்க வேண்டும். அப்போதுதான், நமது இளைஞர்களுக்கு சாவர்க்கர் குறித்தும், விடுதலைப் போராட்டம் குறித்தும் தெரியவரும் என்றார் உத்தவ் தாக்கரே.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai