சுடச்சுட

  

  மிளகாய், கத்தரி, பேட்: மாநகராட்சித் தேர்தலில் வித்தியாசமான சின்னங்கள்

  By புதுதில்லி  |   Published on : 24th April 2017 07:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தில்லி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களுக்கு பச்சை மிளகாய், கத்தரிக்கோல், பேட் போன்ற வித்தியாசமான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.

  வடக்கு தில்லியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் பலருக்கு பச்சை மிளகாய், வாளி, பாட்டில், டார்ச் லைட், உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.

  நரைனா கிராமத்தைச் சேர்ந்த வார்டு ஒன்றில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஒருவர், பேட் சின்னத்தில் களம் கண்டார். தாஸ்கரா கிராமத்தின் வார்டு ஒன்றில் போட்டியிட்ட வேட்பாளருக்கு தையல் இயந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

  இதுதவிர, கேஸ் சிலிண்டர், மெழுகுவர்த்தி, மேஜை, டிராக்டர் ஓட்டும் விவசாயி, பிரஷர் குக்கர், கட்டில் உள்ளிட்ட விதவிதமான சின்னங்களும் வாக்குப்பதிவு இயந்திரத்தை அலங்கரித்தன.

  தெற்கு தில்லி பகுதியில் சங்கம் விஹார் வேட்பாளர் ஒருவர் கண் கண்ணாடிச் சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். திலக் நாகா பகுதியில் ஒருவர் அலமாரி சின்னத்திலும், விகாஸ் புரி பகுதியில் ஒரு வேட்பாளர் வைரக்கல் சின்னத்திலும் போட்டியிட்டனர்.

  கோட், புல்லாங்குழல், சதுரங்கக் கட்டம், பைனாகுலர், கிராமஃபோன் என வாக்காளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையிலான சின்னங்கள் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.

  இதேபோல, கிழக்கு தில்லி மாநகராட்சியில் பள்ளி மாணவர்கள் கொண்டு செல்லும் பை, தீப்பெட்டி, கரும்பலகை, கண்ணாடி டம்ளர், ஏசி, அஞ்சல் அட்டை, ஆட்டோ உள்ளிட்ட சின்னங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

  தில்லி மாநகராட்சித் தேர்தலில், வடக்கு தில்லி மாநகராட்சியில் 1,004, தெற்கு தில்லியில் 985, கிழக்கு தில்லியில் 548 என மொத்தம் சுமார் 2,537 வாக்காளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai