சுடச்சுட

  

  முன்னாள் மத்திய அமைச்சர் குர்ஷித்தின் இல்லத்தில் திருட்டு

  By DIN  |   Published on : 24th April 2017 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் ஃபரூக்காபாத் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை திருட்டு நடைபெற்றது.

  இதுதொடர்பாக, போலீஸார் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித் உத்தரப் பிரதேச மாநிலம், ஃபரூக்காபாதிலுள்ள காயம்கஞ்ச் பகுதியில் வசித்து வருகிறார்.
  இந்நிலையில், அந்த வீட்டில் ஞாயிற்றுக்கிழமை திருட்டு நடைபெற்றதாக வீட்டின் பாதுகாவலர் தெரிவித்தார்.
  இதுதொடர்பாக அவர் அளித்த புகாரில் அந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டும், உள்ளே பொருள்கள் சிதறியும் கிடந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, சல்மான் குர்ஷித்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் திருட்டுபோனவை குறித்து சரிவரத் தெரியவில்லை. எனினும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai