சுடச்சுட

  

  ரயில் பயணம் குறித்து அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையிலும், அனைத்து சேவைகளையும் அளிக்கும் வகையிலும் புதிய செல்லிடப்பேசி செயலி (ஆப்) வரும் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
  "ஹிண்ட்ரயில்' எனப் பெயரிடப்படவுள்ள இந்த செயலி, இப்போது பயன்பாட்டில் உள்ள ரயில்வே தொடர்பான அனைத்து செயலிகளின் ஒருங்கிணைப்பாக இருக்கும்.
  இதில், ரயில் வருகை, புறப்பாடு, தாமதம், ரயில் ரத்து, ரயில் வந்து சேரும் நடைமேடை எண், ரயில் தற்போது வந்து கொண்டிருக்கும் இடம், காலியாக உள்ள இருக்கைகள் விவரம் என அனைத்தையும் இந்த செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும்.
  இது தவிர, ரயில் நிலையத்தில் இருந்து கார் வாடகைக்கு எடுப்பது, சுமை தூக்கும் தொழிலாளர்களை பதிவு செய்வது, ரயில்வே ஓய்வு அறைக்கு முன்பதிவு செய்வது, ஹோட்டல் விவரம், ரயில் சுற்றுலா விவரம், ரயிலில் உணவு பெறுவது உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெற முடியும். இந்த சேவைகளை அளிக்கும் நிறுவனங்களுடன் வருவாய் பகிர்வு முறை அடிப்படையில் இதற்கான ஒப்பந்தத்தை ரயில்வே மேற்கொண்டுள்ளது. ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் அளிக்கும் இந்த செயலி செயல்பாட்டு வந்த பிறகு ஆண்டுக்கு ரூ.100 கோடி கூடுதல் வருவாய் ரயில்வே நிர்வாகத்துக்குக் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  இப்போது, புகார் அளித்தல், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தல், ரயிலில் உணவு பெறுதல் என ரயில்வேயின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக வெவ்வேறு செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. எனினும், பயணிகளின் வசதிக்காக அனைத்து சேவைகளையும் ஒரே செயலி மூலம் அளிப்பதற்காக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai