நாடு முழுவதும் சாலை விபத்துகளில் நாள்தோறும் 410 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் நாள்தோறும் 410 பேர் உயிரிந்துள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் நடத்திய
நாடு முழுவதும் சாலை விபத்துகளில் நாள்தோறும் 410 பேர் உயிரிழப்பு

புதுதில்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் நாள்தோறும் 410 பேர் உயிரிந்துள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக அளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முக்கிய இடம் பெற்றுள்ளது.

நாள்தோறும் செய்திதாள்களில் சாலை விபத்து செய்திகள் இடம் பெறாத நாட்களே கிடையாது என்ற நிலையில், இந்தியாவில் 2015-ஆம் ஆண்டில் சராசரியாக 400 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் சராசரியாக நாள்தோறும் 410 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2016-ஆம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு சாலை விபத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1970-ல் இருந்து கணக்கிடுகையில் தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் அதிகரித்துள்ள சாலை விபத்துகளின் எண்ணிக்கையே 2016ல் நாட்டின் ஒட்டுமொத்த சாலை விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை இந்தளவு உயர காரணம் என கூறப்படுகிறது.

முறையாக பராமரிக்கப்படாத சாலைகள், சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காத ஓட்டுநர்கள், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிக பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வது போன்றவையே ஒட்டுமொத்த சாலைவிபத்து உயிரிழப்புகள் அதிகரிக்க காரணமாக உள்ளது என தெரியவந்துள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com