சுடச்சுட

  

  "இந்தியாவில் இருந்து "இந்தியா'வுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்": பிரதமர் நரேந்திர மோடி டுவிட்

  By DIN  |   Published on : 24th April 2017 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Modi

  புதுதில்லி: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் குழந்தைக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

  தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தனது பெண் குழந்தைக்கு 'இந்தியா' என பெயர் வைத்திருந்தார். அவரது தனது குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, அழகான குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் ஜான்டி ரோட்ஸ்.
   
  இந்நிலையில், நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பக்க பதிவில், 'இந்தியா'வுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். 'இந்தியாவில்' இருந்து' என பதிவிட்டுள்ளார்.

  மோடியின் இந்த டுவிட்டர் பதிவுக்கு நெட்டிசன்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

  ஜான்டி ரோட்ஸ் சமீப காலமாக ஆண்டின் பல மாதங்கள் இந்தியாவில்தான் இருந்து வருகிறார். இந்தியாவின் அதிமுக்கிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, பீல்டிங் பயிற்சி ஆலோசகராக பணியாற்றி வருகிறார். கிரிக்கெட் உலகில் பீல்டிங்காகவே அறியப்படும் கிரிக்கெட்டர் ஜான்டி ரோட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai