சுடச்சுட

    

    அடுத்த ஆண்டுக்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக உ.பி.: யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

    By DIN  |   Published on : 25th April 2017 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    yogi

    லக்லெனவில் நடைபெற்ற கிராம ஊராட்சி தின நிகழ்ச்சியில் பங்கேற்ற உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர்.

    அடுத்த ஆண்டு (2018) அக்டோபர் மாதத்துக்குள் உத்தரப் பிரதேசம் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
    இதுகுறித்து லக்னௌவில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம ஊராட்சி தின நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:
    உத்தரப் பிரதேசத்தை தூய்மையான மாநிலமாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. அந்த வகையில், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக உத்தரப் பிரதேசத்தை மாற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
    இதற்காக அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குக்குள்ளாக, உத்தரப் பிரதேசம் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத மாநிலமாக மாறும்.
    பொலிவுறு நகரங்கள் பற்றி பேசும்போதெல்லாம், பொலிவுறு கிராமங்கள் குறித்தும் நாம் பேச வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். எனவே, கிராமங்களை மேம்படுத்துவது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.
    அதன்படி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள 59 ஆயிரம் கிராம ஊராட்சிகளை நவீனமயமாக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. அதேபோல், அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் 24 மணிநேர மின்சார வசதி கிடைக்கப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்சாரம் விநியோகிக்கப்படுவதில் எந்தப் பாரபட்சமும் இல்லாமல் இருப்பதை அரசு உறுதி செய்யும் என்றார் யோகி ஆதித்யநாத்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai