சுடச்சுட

  

  ஜார்க்கண்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களின் ஆதார் விவரங்கள் வெளியான விவகாரத்தில் கடும் அதிருப்தி தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இத்தகைய நிகழ்வுகள் பெரும் பாதிப்பை உருவாக்கும் என்றார்.
  ஜார்க்கண்டில் முதியோர் ஓய்வூதியத் தொகை பெறுவோரின் ஆதார் விவரங்கள் அந்த மாநில அரசின் இணையதளப் பக்கத்தில் கசிந்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகின.
  10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களின் பெயர், முகவரி, ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. நாடு முழுவதும் கடுமையான விமர்சனங்களை எழுப்பிய இச்சம்பவம் குறித்து ராகுல் காந்தி சுட்டுரையில் (டுவிட்டர்) சில கருத்துகளை திங்கள்கிழமை பதிவிட்டார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
  ஆதார் திட்டத்தில் முன்னேறிச் சென்று கொண்டிருப்பதாக நாம் பெருமை கொண்டிருக்கிறோம். அதேவேளையில், ஆதார் அட்டையில் இடம்பெற்றுள்ள மக்களின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்க இயலாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
  இத்தகைய விவரங்கள் கசிவது அரசுத் திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அதில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
  முன்னதாக, இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடுமாறு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஜார்க்கண்ட் அரசை அறிவுறுத்தியிருந்தது. ஆதார் விவரங்கள் கசிந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம் என்றும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai