சுடச்சுட

  

  ஆர்மீனியா, போலந்து நாடுகளில் ஹமீது அன்சாரி சுற்றுப்பயணம்

  By DIN  |   Published on : 25th April 2017 02:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ansari

  ஆர்மீனியா, போலந்து ஆகிய நாடுகளில் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி 5 நாள்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
  இதில் முதல்கட்ட பயணமாக, ஆர்மீனியாவுக்கு ஹமீது அன்சாரி திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றார். ஆர்மீனியாவில் 26-ஆம் தேதி வரை தங்கியிருக்கும் ஹமீது அன்சாரி, அந்நாட்டு அதிபர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். யேரவான் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கிலும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.
  இதையடுத்து, போலந்துக்கு ஹமீது அன்சாரி 26-ஆம் தேதி செல்கிறார். அங்கு அவர், அந்நாட்டு அதிபர், பிரதமர், செனட் அவைத் தலைவர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) உறுப்பினராவதற்கு இந்தியா முயற்சி மேற்கொண்டு வருவதற்கு அந்த அமைப்பின் உறுப்பினரான போலந்து ஆதரவளித்து வருகிறது. இதுதொடர்பாக அந்நாட்டுத் தலைவர்களுடன் ஹமீது அன்சாரி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  இதுதவிர, வார்ஸா பல்கலைக்கழக கருத்தரங்கில் உரையாற்றுவதுடன், இந்தியத் தூதரகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய கட்டடத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.
  ஹமீது அன்சாரியுடன் அவரது மனைவி சல்மா அன்சாரி, மத்திய இணையமைச்சர் கிரிராஜ் சிங், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீதாராம் யெச்சூரி, டி.பி. திரிபாடி, விவேக் தங்கா உள்ளிட்டோரும் உடன் சென்றுள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai