சுடச்சுட

    

    இடது கை மோதிர விரலில் அழியாத மை இடப்பட்டதால் வாக்காளர்கள் குழப்பம்!

    By புதுதில்லி  |   Published on : 25th April 2017 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி மாநகராட்சித் தேர்தலில் வாக்களித்தோருக்கு இடது கை மோதிர விரலில் அழியாத மை இடப்பட்டது. தேர்தல்களில் வழக்கமாக இடது கை ஆள்காட்டி விரலில் மை இடப்படும் நிலையில், மோதிர விரலில் மை இடப்பட்டதால் வாக்காளர்கள் குழப்பமும் வியப்பும் அடைந்தனர்.

    இதுதொடர்பாக பிரபல பாடகி சுபா முத்கல் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "இதற்கு முன் நடைபெற்ற தேர்தல்களில், இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை இடப்பட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், தற்போதைய தில்லி மாநகராட்சித் தேர்தலில் அது நிகழ்ந்துள்ளது' என்று கூறியுள்ளார்.

    சாந்தினி சௌக் வார்டில் வாக்களித்த சாதிக் (29) என்ற இளைஞர் கூறுகையில், "இடது கை மோதிர விரலில் மை இடப்பட்டதால் வியப்படைந்தேன். அதற்குரிய உத்தரவு எப்போது பிறப்பிக்கப்பட்டது? என்று வாக்குச் சாவடி ஊழியர்களிடம் கேட்டறிந்தேன்' என்றார்.

    இதேபோல, தயானந்த் காலனியைச் சேர்ந்த புனித் நருலா என்பவர் கூறுகையில், "எனது வார்டிலுள்ள வாக்குச்சாவடிக்கு ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே எனது குடும்பத்துடன் சென்றேன். அப்போது, மை இடுவதற்காக இடது கை மோதிர விரலை காட்டுமாறு வாக்குச் சாவடி ஊழியர்கள் கூறினர். நகைச்சுவைக்காக அவ்வாறு கூறுகின்றனர் என்று முதலில் நினைத்தேன். ஆனால், அதுவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்று தெரியவந்தவுடன் வியப்படைந்தேன்' என்றார்.

    மோதிர விரலில் மை இடப்பட்டது ஏன்?
    இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
    தில்லியில் அண்மையில் தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை குழுத் தேர்தலும், ரஜௌரி கார்டன் பேரவை தொகுதி இடைத்தேர்தலும் அடுத்தடுத்து நடைபெற்றன. இதில், குருத்வாரா மேலாண்மை குழு தேர்தலின்போது, இடது கை ஆள்காட்டி விரலில் மையிடப்பட்டது. இதனால், ரஜௌரி கார்டன் இடைத் தேர்தலில், வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை இடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், தில்லி மாநகராட்சித் தேர்தலில் இடது கை மோதிர விரலில் மையிடுமாறு தேர்தல் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai