சுடச்சுட

  

  இந்தியாவில் 2016-இல் 120 புலிகள் உயிரிழப்பு: தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தகவல்

  By DIN  |   Published on : 25th April 2017 12:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tiger

   

  இந்தியாவில் 2016-ஆம் ஆண்டு மட்டும் 120 புலிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியப்படுத்தியுள்ளது.
  நாட்டிலேயே மிக அதிகமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 32 புலிகளும், அதற்கடுத்து கர்நாடகத்தில் 17 புலிகளும், மகாராஷ்டிரத்தில் 16 புலிகளும் உயிரிழந்துள்ளன. மேலும், 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 32 புலிகள் நாடு முழுவதும் உயிரிழந்திருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
  ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில்தான் புலிகள் அதிகபட்ச உயிரிழப்பை சந்தித்துள்ளது. இதற்கு முன்பு 2015-ஆம் ஆண்டில் 80 புலிகளும், 2014 ஆம் ஆண்டு 78 புலிகளும் உயிரிழப்பை சந்தித்துள்ளன.
  இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இப்போது மொத்தம் 2,226 புலிகள் இருப்பதாகவும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
  இதில் 22 புலிகள் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில புலிகள் வயோதிகத்தின் காரணமாகவும், இன்னும் சில விவசாயிகளால் விஷம் வைத்தும் கொல்லப்பட்டுள்ளது.
  தமிழகத்தில்...: தமிழக வனப் பகுதிகளில் 2016 }ஆம் ஆண்டு மட்டும் 7 புலிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கடந்தாண்டில் (2015) தமிழகத்தில் 6 புலிகள் மட்டுமே உயிரிழந்துள்ளன. ஆனால், என்ன காரணத்தால் புலிகள் உயிரிழந்தன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
  ஆனால், 2014 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகப்படியான புலிகள் இறந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 15 புலிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. சில புலிகள் என்கவுன்ட்டர் சம்பவங்களிலும், வேட்டையாடப்பட்டும், விஷம் வைத்தும் கொல்லப்பட்டுள்ளன.
  2014-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, புலிகளின் எண்ணிக்கையில் தமிழகத்துக்கு நான்காவது இடம் கிடைத்தது. தமிழகத்தில் மொத்தம் 229 புலிகள் உள்ளன.
  களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் பாதுகாப்பு சரணாலயங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரிய வந்துள்ளது. புலிகளின் உயிரிழப்பு தொடர்ந்தாலும், முதுமலை, சத்தியமங்கலம் காடுகளில் அவற்றின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

  தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டில் எந்தெந்த இடங்களில் புலிகள் உயிரிழப்பு ?
  1. டிசம்பர் 8, சேகூர், முதுமலை
  2. நவம்பர் 24, மசினக்குடி, முதுமலை
  3. ஜூலை 14, ஆனமலை
  4. ஜூன் 4, ஆசனூர், சத்தியமங்கலம்
  5. ஏப்ரல் 2, நீலகிரி வடக்கு
  6. மார்ச் 19, கூடலூர் (என்கவுன்ட்டர்)
  7. மார்ச் 15, நீலகிரி தெற்கு

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai