சுடச்சுட

  

  கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டால் மட்டுமே பதவி விலகுவேன்: கேரள மின் துறை அமைச்சர்

  By DIN  |   Published on : 25th April 2017 02:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mani

  கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டால் மட்டுமே அமைச்சர் பதவியிலிருந்து விலகுவேன்'' என்று கேரள மின் துறை அமைச்சர் எம்.எம்.மணி தெரிவித்துள்ளார்.
  கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எம்.எம். மணி (70), மின் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர், இடுக்கி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள் அமைப்பின் பெண் ஆர்வலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.
  இதற்கு, மாநிலத்தின் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் மணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
  இதையடுத்து, மணியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரி பெண் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  இந்நிலையில், பெண் தொழிலாளர்களுக்கு எதிராக தான் தவறான கருத்துகள் எதையும் வெளியிடவில்லை என்றும், தனது பேச்சு தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டதாகவும் மணி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
  மேலும், இதற்காக தான் மன்னிப்பு கோர முடியாது என்றும் அவர் அறிவித்தார். இதுகுறித்து, முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவிக்கையில், 'பெண்களுக்கு எதிராக மணி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தால், அது கண்டனத்துக்குரியது' என்றார்.
  இதனிடையே, அமைச்சர் மணி தனது பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் சார்பில் இடுக்கி மாவட்டத்தில் திங்கள்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
  மேலும், பெண் தோட்டத் தொழிலாளர்கள் திங்கள்கிழமையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், 'கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டால் மட்டுமே அமைச்சர் பதவியிலிருந்து விலகுவேன்' என்று மணி திங்கள்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai