சுடச்சுட

  

  காஷ்மீர்: மாணவர்கள்-ராணுவத்தினர் இடையே மீண்டும் மோதல்

  By DIN  |   Published on : 25th April 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kashmir

  ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் திங்கள்கிழமை மூண்ட மோதலின்போது போலீஸாரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தும் மாணவர்கள்.

  ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள இருவேறு கல்லூரிகளில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே திங்கள்கிழமை மீண்டும் மோதல் வெடித்தது.
  போலீஸாரின் அடக்குமுறையைக் கண்டித்து பேரணியாகச் செல்ல கல்லூரி மாணவர்கள் முயன்றதாகவும், அதனை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதால் இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
  காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அருகே காவல் சோதனைச் சாவடி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து கடந்த வாரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இதன் தொடர்ச்சியாக போலீஸாரைக் கண்டித்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையைச் சமாளிக்க காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் 5 நாள்கள் விடுமுறை விடப்பட்டது.
  இந்நிலையில், விடுமுறை முடிந்து கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பெரும்பாலான கல்லூரிகளில் வகுப்புகள் அமைதியாக நடைபெற்ற போதிலும், ஸ்ரீநகரில் அமைந்துள்ள எஸ்.பி. கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள பெண்கள் கல்லூரி ஆகியவற்றில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  அவர்கள் பேரணியாகச் செல்ல முயன்றபோது பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் மூண்டது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். மேலும், சிறிய அளவிலான தடியடியும் நடத்தப்பட்டது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai